Saturday, April 17, 2010

பிரிவு

அவளுக்கு எப்படி சொல்வேன்?
யாரேனும் சொல்லுங்களேன் அவளிடம்
பிரிவும் சுகம் என்று!

அந்தி பொழுதில் -தாமரையாள்
பொய்கைக்கு நீரெடுக்க வருவாள்
நீரோடு வாழ்ந்தாலும் ஒட்டாத
சுகத்தை அவளறிய சொல்வாயா?
தாமரை இலையே!

மயிலென மழை கண்டு
வாசல் வந்தாடுவாள்
காதல் வேகத்தில்
கலந்து மழையாகி, களைந்து காற்றாகும்
இன்பத்தை அவளிடம் சொல்வாயா?
கார்முகிலே!

காற்று வேண்டி காட்டு பக்கம் வருவாள்
தேனெடுத்த வண்டு தேகம் பிரிந்த பின்
சுமையிழந்த சுகம் சொல்வாயா?
காட்டுப்பூவே!

இசை வேண்டி குழலெடுத்து
இசைத்திடுவாள்
உன்னை பிரிந்த கணம்-காற்று
இசையாகும் இன்பம் சொல்வாயா?
புல்லாங்குழலே!

இலையும் பூவும்
காற்றும் முகிலும்
அந்த குழலும்-தோற்றால்
என் மனமே என்னை தேற்றிவிடு
பிரிவு துன்பமென்று!!!

1 comment:

Aditya Kumar 29 said...

abbey translate it in hindi or english ...