Saturday, May 22, 2010
நியூட்டன் பார்க்க தவறிய இலை(Newton failed to see falling leaf)
எழுந்து நடந்தேன், தூய்மையான காற்று நுரையீரல் நிறைத்தது. சிகப்பு நிற சூரிய ஒளி சுடாமல் சுகமாய் தொட்டது.
இந்த இயற்கை ஒரு அறிவு புதையல் என மனதில் தோன்றியது. சூரியனின் ஒளி நிறம் மாறுவதில்லை, நம்மை அடையும் ஒளி யின் அலை நீளத்தை பொறுத்து நாம் தான் அதை மாற்றி உணர்கிறோம்.
பறவைகள் வீடு கட்ட இலவச இடம் கொடுத்த மரத்தில் இருந்து பழுப்பு இலைகள் அழகாய் ஆடி ஆடி மெதுவாக பூமி நோக்கி வந்தன.
நியூட்டன் ஆப்பிளுக்கு பதிலாக இலையை பார்த்திருந்தால்?,
புவியீர்ப்பு விசையோடு, காற்றின் எதிர்விசை(air resistance) பற்றியும் அறிந்திருப்பார்.
அரிஸ்டாட்டில்(Aristotle), பூமி நோக்கி வரும் பொருளின் முடுக்கம்(acceleration) அதன் நிறையை(mass) பொறுத்து மாறும் என தவறாக சொல்லி இருக்கமாட்டார்.
கலிலியோவுக்கு(Galileo) காற்றின் எதிர்விசை (air resistance) பற்றி அறியும் தேவை இருந்திருக்காது.
கனமான ஆப்பிள் பழத்தை பார்த்ததால் நுணுக்கமான விஷயங்களை பார்க்க தவறிவிட்டார் நியூட்டன்
கனமான கனவுகள், கனமான நினைவுகள், கனமான எதிர்பார்ப்புகளில் வாழ்க்கையின் நுணுக்கமான விஷயங்கள் நமக்கு புலப்படாமல் போவதை அறிந்தேன்.
Note:Acceleration due to gravity is constant irrespective of mass of the falling body. The difference experienced between a leaf and a fruit is due to the air's resistance.
Sunday, May 9, 2010
அத்திக்காய் காய் காய் (athikaai kaai kaai superb lyrics)
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ
நீ என்னை போல் பெண்ணல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
கன்னிக்காய் ஆசைக்காய் காதல் கொண்ட பாவைக்காய்
அங்கே காய் அவரைக்காய் மங்கை எந்தன் கோவைக்காய்
மாதுளங்காய் ஆனாலும் என் உளங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
இத்திக்காய் காயாதே என்னை போல் பெண்ணல்லவோ
இரவுக்காய் உறவுக்காய் ஏங்கும் இந்த ஏழைக்காய்
நீயும் காய் நிதமும் காய் நேரில் நிற்கும் இவளை காய்
உருவங்காய் ஆனாலும் பருவங்காய் ஆகுமோ
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
ஏலக்காய் வாசனை போல் எங்கள் உள்ளம் வாழக்காய்
சாதிக்காய் பெட்டகம் போல் தனிமை இன்பம் கனியக்காய்
சொன்னதெல்லாம் விளங்காயோ தூதுவிளங்காய் வெண்ணிலா
என்னை நீ காயாதே என்னுயிரும் நீயல்லவோ
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
உள்ளமெல்லாம் மிளகாயோ ஒவ்வொரு பேர் சுரைக்காயோ
வெள்ளரிக்காய் பிளந்தது போல் வெண்ணிலவே சிரித்தாயோ
கோதையெனை காயாதே கொற்றவரைக்காய் வெண்ணிலா
இருவரையும் காயாதே தனிமையிலேங்காய் வெண்ணிலா
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ
The song that inspired kannadhasan to write this love song
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காய்ந்து உனக்கு என்ன பயன்-பற்றில்லா
அவரைக்காய் கோவைக்காய் அவதியுரும் பாவைக்காய்
அங்குமிங்கும் தூதுவிளங்காய்...............not able to know further..
Many songs of our present day poets including kannadhasan, vairamuthu are taken from old poems
Saturday, May 1, 2010
கண்ணில் தாகம் தீருமோ(kannil dhagam theerumo)
பாடியவர்: சௌமியா
இசையமைப்பு :கார்த்திக்ராஜா
காதல் ஏக்கம் பயம் என பல உணர்வுகளை சுமக்கும் பாடல் இது
ஏனோ நெஞ்சம் தொட்டது இந்த பாடல்
http://www.youtube.com/watch?v=zCOowtelmI4
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
கோபங்கள் பேசும்போது
வேதனை கூடும்
பிரேமைகள் பேசும் போது
மோகம் கூடும்
மௌனம் தான் பாடலா
வலி எல்லாம் தரும் ஊடலா
இது போதும் இது போதும்
ஒரு வார்த்தை சொல்வாய் நண்பா
உயிர் தேடும் உயிர் தேடும்
ஒரு கூடல் செய்வாய் நண்பா
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
வீட்டின் தனிமையிலே
தீண்டி என்னை சுகிப்பவனே
கொஞ்சம் விலகிவிட்டால்
முத்தம் பல பறிப்பவனே
சோலை பூவெல்லாம்
ஆடையாய் சூடி பார்ப்பவன்
மாமலை நேரங்கள்
ஈரமாய் என்னை சேர்ப்பவன்
நீயா நீயா தனிமையில் செல்கிறாய்
மனம் கலைந்து சிரித்திட
கண்ணில் தாகம் தீருமோ
மித்ரா மித்ரா
நெஞ்சில் காயம் ஆறுமோ
மித்ரா மித்ரா
வீட்டின் தனிமையிலே
ஏதோ ஒரு பெருநெருப்பு
பூவின் அசைவினிலே
ஏதோ ஒரு படபடப்பு
சொல்லும் வார்த்தைகள்
காற்றிலே தேய்ந்து போகுதே
சினேகம் வேறில்லை
புன்னகை நெஞ்சம் வேண்டுதே
கண்கள் மீண்டும் வலிகளும் போதுமே
இனி விடியல் இனித்திட
நெஞ்சில் அச்சம் பொங்குதே
ஏனோ ஏனோ
கண்ணீர் மிச்சம் தங்குதே
ஏனோ ஏனோ
Saturday, April 17, 2010
பிரிவு
யாரேனும் சொல்லுங்களேன் அவளிடம்
பிரிவும் சுகம் என்று!
அந்தி பொழுதில் -தாமரையாள்
பொய்கைக்கு நீரெடுக்க வருவாள்
நீரோடு வாழ்ந்தாலும் ஒட்டாத
சுகத்தை அவளறிய சொல்வாயா?
தாமரை இலையே!
மயிலென மழை கண்டு
வாசல் வந்தாடுவாள்
காதல் வேகத்தில்
கலந்து மழையாகி, களைந்து காற்றாகும்
இன்பத்தை அவளிடம் சொல்வாயா?
கார்முகிலே!
காற்று வேண்டி காட்டு பக்கம் வருவாள்
தேனெடுத்த வண்டு தேகம் பிரிந்த பின்
சுமையிழந்த சுகம் சொல்வாயா?
காட்டுப்பூவே!
இசை வேண்டி குழலெடுத்து
இசைத்திடுவாள்
உன்னை பிரிந்த கணம்-காற்று
இசையாகும் இன்பம் சொல்வாயா?
புல்லாங்குழலே!
இலையும் பூவும்
காற்றும் முகிலும்
அந்த குழலும்-தோற்றால்
என் மனமே என்னை தேற்றிவிடு
பிரிவு துன்பமென்று!!!
Sunday, March 21, 2010
காதலின் காத்திருப்பு
மணம் இல்லா மலரோடு
மனம் செல்வதில்லை.
மனம் தொடா இசையை- என்
உயிர் சுகிப்பதில்லை
உனை தொடா காற்று
மண் தொட்டு வந்தாலும்
மலர் தொட்டு வந்தாலும்
வாசனை சுமக்கவில்லை
காற்றுக்குமா நீ தடை விதித்தாய்!!!
எந்த கூற்றுக்கு நீ இசைவாய்?
வாணும் வண்ண நிலவும் –உன்
காலடியில் தருவேன்- என
பொய்யுரைக்க மாட்டேன்
தேனும் தெள்ளிய பாலும் –
உன் மொழியென -திகட்டும்
சொல்லுரைக்க மாட்டேன்
வாழும் வரை
காதல் சுமந்து காத்திருப்பேன்
அதன் பின்னே
மண்ணோடு மனம் கலந்த பின்னும்
உன் காலடி தடம் பட காத்திருப்பேன்
Monday, March 15, 2010
கனவு காதல்
மாசறு பொன்னே என்றால்
உனை அணியாமல் போய்விடுவேன்
வாசனை மலரே என்றால்
மாலையில் வாடிவிடுவாய்
ஜீவநதி என்றால்
உப்பு கடல் தொட்டு கலந்திடுவாய்
என்னுயிர் என்றால்
என்றாவது பிரிந்துவிடுவாய்
என்னவள் என்பதை விட
என்ன நான் சொல்லுவேன்
காதல் மயக்கத்தில்
காலம் மறந்திட்டேன்
பொழுது புலர்ந்தது
கனவு தெளிந்தது
இமை திறந்ததும்
கனவின்
சுவையும் இல்லை
சுமையும் இல்லை
நாளைய தூக்கத்தில்
சொல்லாமல் வந்துவிடு
கவிதை என சொல்லி
கிறுக்கல்கள் செய்திட
காரணம் வேண்டும்.
Sunday, March 7, 2010
Why to Live?--The eternal question
I wondered several times, from where are all the religions came. Which question they are trying to answer.
Several years back, I attended funeral of my grand father's brother. My cousin sister Leela, who was then a little kid asked me a question. The question which made her to occupy a special place in my heart. It went like this "Brother, we are all getting birth, some day we are dying then why we are getting birth? Grandfather's death has made her to come out with this search.
What answer I will give her?. A answer searched by several hundred crore people, several thousand people tried to answer but still it remains unanswered. People have spent their whole life in searching answer for this.
I asked her, what you want to become in future?. She replied "I want to become a doctor". I tried to answer her question by telling ,your life is for becoming a doctor thereby serving people, helping them get relieved of pain.
I wanted to answer the question why to live? but ended up telling her how to live(by serving others). It might have happend that religions were formed to answer this question but ended up telling how to live. If everyone has to serve others, then why everyone has to take birth in first place.
If going by Hindu religion, life is to fulfill past karma. Why at all karmas has to be fulfilled?. If the answer is to reach Nirvana which is unification with universal soul. What if the soul doesnt attains nirvana. Where is our soul? where is universal soul
Christianity says we are here for His(God's) Pleasure. Why we have to be there for pleasing the invisible.
Islam says Allah created all and he knows why he has created us. If Allah created us to worship him, why someone should create someone to worship him?
If God created universe, who created God?
I have no good knowledge of religions. If anyone of you know about answer that exists in any language, please help me.
In finer level everything goes to atomic or even smaller forms. These smaller forms combine, manipulate and become something else. All other forms of life seems to search only for food. Why man wants wealth, fame and so many other things that he cant carry with him to graveyard.
If i stay away from the idea of God and religions, will science answer my question? Then i have a question on evolution itself. If man evolved from monkeys then why are monkeys still around us? Does monkeys show an iota of change that proves they are evolving to be humans after several thousand or million years?
In which direction should i go to search answer? spiritual? philosophical?Scientific.
The search continues