பொங்கும் எண்ணமெல்லாம்
பொருக்கி வைத்தேன் காகிதத்தில்
இயற்றும் வரை இன்பம் தான்
இயற்றிய பின் சுருட்டி எறிந்தேன் -
ஜன்னல் வழி
அடையும் வரை தான் இன்பம்.
குரங்கு மனம்!!
காகிதத்தில் சுருண்ட கவிதை ஜன்னல் வழி
விழுந்தது கனகாமர பூந்தோட்டத்தில்
தோட்டத்து நீர் பட்டு கவிதை கரைந்து விட
அதை குடித்த கனகாமர செடி
பட் பட் பட் என்றது
கைதட்டும் பாராட்டா?
கைகொட்டும் ஏளனமா?
அன்று கேட்காமல் பள்ளிக்கு சென்று விட்டேன்.
(பி.கு). கனகாமர விதை நீர் பட்டால் வெடிக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment