மழைக்காலம்
மதிய வேளை
திறந்தது வானம்
பொழிந்தது மேகம்
வழிந்தது சாலை
சிரித்தது சோலை
விடுமுறை நாள்
சிறப்பு வகுப்பு
பள்ளியில் –சகோதரனுக்கு
உணவு கொண்டு செல்ல வேண்டும்
வாசல் பார்த்து நின்றேன்
எப்பொழுது நிற்கும்?
குடை வாங்க வேண்டும்
சொன்னது மனது
காத்து களைத்தன கால்கள்
சட்டென்று மனதில் ஒரு ஒளி
கிடைத்தது ஒரு வழி
நனைந்தால் என்ன ஆகும்?
துணிந்து விட்டேன்
நனைந்து விட்டேன்
புதிதாய் பார்த்தேன் மழையை
எத்தனை இன்பம்
இதற்கா தயங்கி நின்றேன்?
அடுத்த அடியில் என்ன? என
தயங்கி நிற்க நேர்ந்தால்
மழையே குரு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment