அன்று
வெள்ளி முளைத்த கருவானில்
துள்ளி விளையாடும் வெண்ணிலவே
அல்லி பூத்த பொய்கையிலே
உந்தன் முகம் கண்டு அகம் மகிழ்ந்தேனே
நேரமே தெரியாமல் உன்னழகை
பார்வையாலே பருகி நிற்க
சொக்கும் தூக்கம் சொன்னது
உறங்கும் நேரமென்று
இன்று
கண்டு ரசிக்க அல்லி பூத்த பொய்கை இங்கில்லை
உன்னை அண்ணார்ந்து பார்க்க நேரமுமில்லை
உன்னோடு அழகென்று பொய்யுரைக்க
என்னோடு ஒரு கள்ளியும் இல்லை.
நில்லாமல் ஓடுகிறேன் -இது என் வாழ்க்கை
உயரத்தில் நீ என்ன வேடிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
என்னடா ஆச்சு உனக்கு... ஒரே ஃபீலிங்க்ஸ்...
EnArivu kolunthe very supper nee en varisu endru nirubithuvittai
Post a Comment